தூத்துக்குடியில் தலை துண்டித்து வாலிபர் படுகொலை
- சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி.சந்தீஷ், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
- தலை துண்டிக்கப்பட்ட வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை வடக்கு சிலுக்கன்பட்டியில் ஆட்டுச்சந்தை உள்ளது.
இங்கு இன்று காலை ஒரு வாலிபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தட்டப்பாபறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி.சந்தீஷ், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். தலை துண்டிக்கப்பட்ட வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையத்தில் மாயமானவர்கள் குறித்து தகவல்களையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.