உள்ளூர் செய்திகள்

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபர் கைது

Published On 2023-02-02 15:09 IST   |   Update On 2023-02-02 15:09:00 IST
  • அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் ஜீவாவை சுற்றி வளைத்து பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
  • ஆசிரியையின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று அந்த ஆசிரியை பள்ளி முடிந்து அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த குன்னூரை சேர்ந்த ஜீவா (35) என்பவர் திடீரென ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.

இதில் வலி தாங்க முடியாத ஆசிரியை அலறி சத்தம் போட்டு கதறினார். இதைப்பார்த்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தியபோது ஜீவா தப்பியோட முயன்றார்.

உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் ஜீவாவை சுற்றி வளைத்து பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த ஆசிரியையை, ஆட்டோ டிரைவர், அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார்.

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆசிரியை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆசிரியையின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News