உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2023-07-07 09:21 IST   |   Update On 2023-07-07 09:21:00 IST
  • விருத்தாசலம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • தேவக்குமாரை மங்கலம் பேட்டை போலீஸ் நிலையத்துக்குஅழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம் பேட்டை பகுதியில் வயல்வெளியில் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் மங்கலம்பேட்டை எல்லைக்குட்பட்ட விஜய மாநகரம், புது ஆதண்டார் கொல்லை கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் சோதனை நடத்தினர்.

அப்போது உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் தேவக்குமாரை (37) பிடித்து அவரிடமிருந்த நாட்டு துபாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை மங்கலம் பேட்டை போலீஸ் நிலையத்துக்குஅழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News