உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2022-06-07 12:06 IST   |   Update On 2022-06-07 12:06:00 IST
  • திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி எல்லம்மாள் (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த எல்லம்மாள் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News