உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை- நண்பர்கள் 2 பேர் கைது

Update: 2022-06-30 10:09 GMT
  • அருண் மார்த்தாண்டன் அவரது நண்பர் நைனா புதூர் ராம்குமார் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். கத்தியாலும் குத்தி உள்ளனர்.
  • கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

என்.ஜி.ஓ.காலனி:

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் காட்டுவிளை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 26-ந் தேதி சொத்தவிளையில் வசிக்கும் தனது நண்பர் அருண் மார்த்தாண்டன் (31) வீட்டுக்குச் சென்றார். அங்கு பேசிக் கொண்டிருந்த போது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அருண் மார்த்தாண்டன் அவரது நண்பர் நைனா புதூர் ராம்குமார் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். கத்தியாலும் குத்தி உள்ளனர்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சுசீந்தரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே மணிகண்டனை தாக்கியதாக ராம்குமார் மற்றும் அருண் மார்த்தாண்டன் இருவரையும் போலீசார் பிடித்தனர். ராம்குமாருக்கு காயங்கள் இருந்ததால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை மணிகண்டன் இறந்ததால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் போலீஸ் காவலில் இருந்த ராம்குமார், அருண்மார்த்தாண்டன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News