வானகரம் அருகே விபத்து- தொழிலாளி பலி
- அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ்.
- அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய டிரைவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் வெற்றிச் செல்வன் (26). கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் வானகரம் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிச் செல்வனின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்த வெற்றிச் செல்வன் கண்டெய்னர் லாரியின் பின்பக்க சக்க ரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் ஏராளமானோர் திரண்டதால் விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து வெற்றிச் செல்வன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய டிரைவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.