உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற பெண் விபத்தில் பலி
- மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேவியர்.
- ஒருவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி மஞ்சளா (வயது55) வீட்டு வேலை செய்து வந்தார்.
அவசர வேலையாக கேளம்பாக்கம் வரை செல்வதற்கு பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஒருவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றார்.
பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ ஒன்று திடீரென திரும்பியதில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது., இதில் தலையில் அடிபட்டு மஞ்சுளா காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.