உள்ளூர் செய்திகள்

திருவாலங்காடு அருகே ரெயில்வே சிக்னல் வயரை திருடிய 7 பேர் கும்பல் கைது

Published On 2022-06-17 06:55 GMT   |   Update On 2022-06-17 06:55 GMT
  • ரெயில்வே சிக்னல் வயரை திருடியது தொடர்பாக கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சிக்னல் வயர் மற்றும் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.
  • பின்னர் கைதான 7 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருத்தணி:

திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே தொழுதாவூர் ரெயில்வே கேட் பகுதியில் சிக்னலுக்காக பொருத்தப்பட்ட காப்பர், அலுமினியம் கலந்த வயர்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

மேலும் சில வயர்களை தொழுதாவூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி இருந்தனர். அதனை ரெயில்வே போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில் குமரேசன் உத்தரவின் பேரில் அரக்கோணம் கோட்ட உதவி ஆணையர் ஏகே.பிரித் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மதுசூதன ரெட்டி, பூமிநாதன் மற்றும் திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செபஸ்டின் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக அரக்கோணம் அடுத்த சின்ன மோசூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், விக்னேஷ்வரன், ஜீவா, திருவலாங்காடு சின்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சாரதி, தினேஷ், திருவள்ளூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன், சுபாஷ் ஆகிய 7 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சிக்னல் வயர் மற்றும் கம்பிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 7 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News