உள்ளூர் செய்திகள்
அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை... விஜய் வசந்த் திறந்து வைத்தார்
- பள்ளிக்கு கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
- கோரிக்கையை ஏற்று வகுப்பறைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 23.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதலாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறையை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று வகுப்பறைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 23.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதற்கான பணிகள் நிறைவடைந்து மாணவர்களுக்காக அந்த கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.