உள்ளூர் செய்திகள்
காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
- மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியரை பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
அறக்கட்டளை தலைவர் திரு. முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சந்திரசேகர், மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் திரு. யூசுஃப் கான் மற்றும் காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.