உள்ளூர் செய்திகள்
வண்டலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை
- வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் மணி. காவலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவரும் மருமகனை பார்க்க வந்தார்.
பின்னர் இன்று காலை அவர்கள் திரும்பி சென்ற போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.