உள்ளூர் செய்திகள்

எதுமைலை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது

Published On 2023-01-22 12:45 IST   |   Update On 2023-01-22 12:46:00 IST
  • காரில் உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு 3 மான்களை வேட்டையாடி கொண்டு வந்தது தெரியவந்தது.
  • திருச்சி மாவட்ட வனச்சரககத்திற்கு உட்பட்ட எதுமலை வனப் பகுதியில் மான்களை வேட்டையாடியதும் தெரியவந்தது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இன்று காலை 7 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுநடுவலூர் ஊராட்சிக்குப்ட்ட வெள்ளனூர் அருகே வந்து கொண்டிருந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதில் வந்தவர்களிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த காரில் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு 3 மான்களை வேட்டையாடி கொண்டு வந்தது தெரியவந்தது.

காரில் இருந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெள்ளனூரை சேர்ந்த மணிகண்டன் (24), கோவிந்தன் (33), கார்த்திக் (19), மணி (17) மற்றும் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பதுதெரிந்தது.

மேலும், இவர்கள் திருச்சி மாவட்ட வனச்சரககத்திற்கு உட்பட்ட எதுமலை வனப் பகுதியில் மான்களை வேட்டையாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டன் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் மணிகண்டன், கோவிந்தன் ஆகியோரிடமிருந்து 2 உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கியையும், கோவிந்தனுடைய காரையும், வேட்டையாடப்பட்ட 3 மான்களையும் போலீசார் பறிமுதல் செய்து பெரம்பலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் மான்கள் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News