உள்ளூர் செய்திகள்

சுங்கச்சாவடியில் ஆயுதங்களுடன் மிரட்டல்- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2023-01-27 13:06 IST   |   Update On 2023-01-27 13:06:00 IST
  • சீர்நாயக்கன்பட்டி ஆ.வெல்லோடு கரட்டழகன்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நடராஜன்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.

மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் சீர்நாயக்கன்பட்டி ஆ.வெல்லோடு கரட்டழகன்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நடராஜன். இவர் சம்பவத்தன்று பசுபதி பாண்டியன் நினைவு நாளுக்கு சென்றார்.

அப்போது மதுரை கூடக்கோவில் அருகே உள்ள பாரபத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த மறுத்ததுடன் ஆயுதங்களை காட்டி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அங்கிருந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தினார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.

இந்த நிலையில் நடராஜன் மீது திண்டுக்கல், தேனி, மதுரை போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும் தொடர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததை அடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குண்டர் சட்டத்தில் நடராஜனை கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கலெக்டர் அனீஷ்சேகர் குண்டர் சட்டத்தில் நடராஜனை கைது செய்ய உத்தர விட்டார். போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

Similar News