உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் நிதி கட்டமைப்பு குறித்து மூன்று நாட்கள் ஜி-20 மாநாடு

Published On 2023-06-19 15:21 IST   |   Update On 2023-06-19 15:21:00 IST
  • இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
  • பல்வேறு அமர்வுகளுடன் நாளை மறுநாள் வரை இந்த ஜி-20 மாநாடு நடைபெறுகிறது.

மாமல்லபுரம்:

"ஜி-20" மாநாட்டு அமைப்பின் நிலையான நிதிக்கான பணிக் குழுவினர் மாநாடு, மாமல்லபுரம் "ரேடிஷன்" நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை துவங்கியது., இதில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நாட்டின் நீடித்த வளர்ச்சி, லட்சிய இலக்குகள், சீரமைப்பு, நிதிக்கான கட்டமைப்பு நோக்கங்கள், கடந்த கூட்டங்களின் முக்கிய அம்சங்களை மறு பரிசீலனை செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து இன்று கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இந்திய பிரதிநிதிகளாக, பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆலோசகர் திருமதி கீதுஜோஷி, சந்தின் ரைனா உள்ளிட்ட இந்திய பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். இன்னும் பல்வேறு அமர்வுகளுடன் நாளை மறுநாள் வரை இந்த "ஜி-20" மாநாடு நடைபெறுகிறது.

Tags:    

Similar News