உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் இன்று காலை தி.மு.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்

Published On 2023-05-04 16:30 IST   |   Update On 2023-05-04 16:30:00 IST
  • பலத்த காயம் அடைந்த கலைவாணனுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் காந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி இந்திரா. இவர் திருவள்ளூர் நகராட்சி 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் கலைவாணன். இவர் தி.மு.க.வில் நகர மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் சாமியானா பந்தல், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கலைவாணன் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கலைவாணனுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News