திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை வழிமறித்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கொள்ளையர்கள்
- கடம்பத்தூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி.
- திருப்பாச்சூர் பஜார் வீதியைச் சேர்ந்தவர் ஜெகன்மோகன்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(24). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு அவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென மகாலட்சுமியை வழிமறித்து மிரட்டினர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பாச்சூர் பஜார் வீதியைச் சேர்ந்தவர் ஜெகன்மோகன். இவரது மனைவி சைலஜா (42). இவர் தனியார் பள்ளியில் படித்து வரும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சைலஜா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துதப்பிச் சென்றனர்.
சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்தில் பெட்டிகடை நடத்தி வருபவர் ரவி. கடைக்கு வந்த ஒருவர் திடீரென பட்டாக்கத்தியால் ரவியை மிரட்டி ரூ.8 ஆயிரத்தை பறித்து சென்றான்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழுதிகைமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்நேக் பாபுவை கைது செய்தனர்.