உள்ளூர் செய்திகள்

சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதியில் தொடர் திருடில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2023-09-19 17:20 IST   |   Update On 2023-09-19 17:20:00 IST
  • செல்போன் மற்றும் எடை எந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
  • மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

சூனாம்பேடு:

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம், கடப்பாக்கம், சூனாம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதைபோல சூனாம்பேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வேலூர் தபால் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.24 ஆயிரத்து 500 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதைபோல கடப்பாக்கம் தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்து விலையுயர்ந்த செல்போன் மற்றும் எடை எந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது சம்பவங்கள் குறித்து சூனாம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் உத்தரவின் பேரில் சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சூனாம்பேடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் தபால் நிலையத்தில் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புகொண்டார். இந்நிலையில் அவருடன் திருட்டில் ஈடுபட்ட அவரது நண்பர்களான மகாவீர், சந்திரகுமார் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 13 மோட்டார் சைக்கிள்கள், புகைப்பட கேமரா, ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News