உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் தேர்வு மையத்துக்குள் புகுந்த குரங்குகளால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

Published On 2023-03-13 14:30 IST   |   Update On 2023-03-13 14:30:00 IST
  • திருவள்ளூர் மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில் மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
  • குரங்கு கூட்டம் ஒன்று பள்ளிக்குள் புகுந்தது.

திருவள்ளூர்:

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது.திருவள்ளூர் மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில் மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே மாணவிகள் வந்து அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து தேர்வுக்கு படித்து கொண்டு இருந்தனர்.

அப்போது குரங்கு கூட்டம் ஒன்று பள்ளிக்குள் புகுந்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் ஹாயாக பள்ளி வளாகத்தை சுற்றி வந்தன. இதனை கண்ட மாணவிகள் பயத்தில் அலறியடித்து ஓடினர்.

இதனை அறிந்த பள்ளி ஊழியர்கள் விரைந்து வந்து குரங்குகளை பள்ளியில் இருந்து விரட்டினர். பின்னர் அந்த குரங்குகள் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்துக்கு தாவிக் குதித்து சென்றன. இதனால் மாணவிகள் நிம்மதி அடைந்தனர். பின்னர் தேர்வு வழக்கம்போல் நடைபெற்றது.

Similar News