உள்ளூர் செய்திகள்

திசையன்விளையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்களுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம்

Published On 2023-10-22 09:55 IST   |   Update On 2023-10-22 09:55:00 IST
  • சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
  • பிடிபட்ட வாலிபர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து நேரில் வரவழைத்தனர்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை புறவழிச்சாலை, மன்னார்புரம்-இட்டமொழி சாலை பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மோட்டார் சைக்கிள்கள் சைலன்சர்களை கழற்றி வைத்து விட்டு அதிக ஒலியுடன் வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார் சென்றது.

இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட அப்புவிளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமரன் மகன் சிவா (வயது 20), ஆயன்குளம் பீர்முகமது மகள் சேக் முகமது (20), சுப்பிரமணியபுரம் செல்வகுமார் மகன் ராகுல்(18), திசையன்விளை காமராஜர் நகர் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்துரு(18) ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்பு அவர்களுக்கு தலா ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலித்தனர். மேலும் பிடிபட்ட வாலிபர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து நேரில் வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News