உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைக்ககோரி கிராம மக்கள் சாலை மறியல்
- கும்மிடிப்பூண்டியை அடுத்த அமரம்பேடு கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்டோர வசித்து வருகின்றனர்.
- சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த அமரம்பேடு கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்டோர வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி உள்ள சத்தியவேடு-கவரப்பேட்டை நெடுஞ்சாலையை பூதூர், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடிபுத்தூர், பூவலம்பேடு, சின்ன புலியூர் உள்ளிட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குண்டும் குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து சாலையை சீரமைக்ககோரி அமரம்பேடு கிராமமக்கள் 100-க்கும்மேற்பட்டோர் இன்று காலை கவரப்பேட்டை-சத்தியவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் ராமன், டி.எஸ்.பி. ரீத்து, உதவிப் பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.