உள்ளூர் செய்திகள்
ராயபுரத்தில் வழிப்பறி- ரவுடி உள்பட 2 பேர் கைது
- வழிப்பறி சம்பவத்தில் ரவுடிகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
- 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை ராயபுரத்தில் முகமது தமீம் என்பவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் ரூ 8 லட்சம் பணத்தை வழிப்பறி செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வழிப்பறி சம்பவத்தில் ரவுடிகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த ரவுடி வெங்கடேஷ் மற்றும் கொருக்குபேட்டையை சேர்ந்த கருணா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.