உள்ளூர் செய்திகள்

பொன்னேரி-கும்மிடிப்பூண்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் உள்பட 2 பேர் கைது

Published On 2023-07-12 11:41 IST   |   Update On 2023-07-12 11:41:00 IST
  • கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
  • வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடப்பெரும்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள், சென்னை அண்ணா நகரை சேர்ந்த புருஷோத்தமன், மீஞ்சூர் சூர்யா நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பதும் அவர்கள் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News