உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லியில் பொங்கல் இலவச வேட்டி-சேலையை குப்பை வண்டியில் எடுத்து சென்றதால் பரபரப்பு

Published On 2022-12-29 15:07 IST   |   Update On 2022-12-29 15:07:00 IST
  • பூந்தமல்லி வட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு தாசில்தார் செல்வம் தலைமையில் இலவச வேட்டி, சேலைகள் அனுப்பும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
  • சில ரேசன் கடைகளுக்கு மட்டும் பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை குப்பை ஏற்றி செல்லும் டிராக்டர் குப்பை வண்டியில் அனுப்பப்பட்டது.

பூந்தமல்லி:

பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை பரிசாக வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகள் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் இருந்து ரேசன்கடைகளுக்கு அனுப்பும் பணிநடக்கிறது.

இந்த நிலையில் பூந்தமல்லி வட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு தாசில்தார் செல்வம் தலைமையில் இலவச வேட்டி, சேலைகள் அனுப்பும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் சில ரேசன் கடைகளுக்கு மட்டும் பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை குப்பை ஏற்றி செல்லும் டிராக்டர் குப்பை வண்டியில் அனுப்பப்பட்டது. இது பொதுமக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து தாசில்தார் செல்வத்திடம் கேட்டபோது, ரேசன் கடைகளுக்கு இலவச இலவச வேட்டி சேலைகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வண்டியில் சென்றது பொங்கல் பரிசு கிடையாது.

வேட்டி, சேலைதான். ஆனால் அதனை கொண்டு செல்ல பயன்படுத்தியது குப்பை வண்டியா? என்பது எனக்கு தெரியாது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.

Tags:    

Similar News