ஊத்துக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
- வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த 6 மாதங்களாக ஆர்த்தி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரக்கம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களது மகள் ஆர்த்தி (வயது 17).
இவர் சீதஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் கதறி துடித்தார்.
இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சக்தியபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 6 மாதங்களாக ஆர்த்தி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து உள்ளார். அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்த்தியின் சகோதரியும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.