உள்ளூர் செய்திகள்
பாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- முதியவர் பலி
- பாடி மேம்பாலத்தில் இன்று மதியம் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
- அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
பாடி மேம்பாலத்தில் இன்று மதியம் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே அங்கேயே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்தில் பலியானது மேத்யூ (வயது68) என்பது தெரிய வந்தது. அவரை பற்றி அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.