உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட பரசுராமன்.

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

Published On 2023-06-23 09:36 IST   |   Update On 2023-06-23 09:36:00 IST
  • வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு எந்த தகவலும் வரவில்லை.
  • சிறுமியின் தாய் மீண்டும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லுக்கு வந்து தனது மகள் குறித்து விசாரித்தார்.

கோபி:

திருவண்ணாமலை மாவட்டம் சீனதங்கல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரசுராமன் (41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த பெண் 17 வயதான தனது மகளுக்கு வேலை தேடி வந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது மகளை கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மில்லுக்கு அழைத்து வந்தார். அவர் தனக்கு உதவியாக கள்ளக்காதலன் பரசுராமனையும் அழைத்து வந்தார். பின்னர் மகளை மில்லில் விட்டு விட்டு அவர்கள் மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து சிறுமியின் தாய் மீண்டும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லுக்கு வந்து தனது மகள் குறித்து விசாரித்தார்.

அப்போது சிறுமி வேலைக்கு சேர்ந்த மறுநாளே பரசுராமன் வந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுமியை கடத்தி சென்ற பரசுராமனை தேடிவந்தனர். அப்போது அவர்கள் திருப்பூரில் ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் திருப்பூர் விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாயின் கள்ளக்காதலன் பரசுராமனை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News