உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,605 கனஅடியாக அதிகரிப்பு
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
நேற்று இந்த பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 3,992 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 4,605 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 102.88 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.06 அடியாக உயர்ந்தது.