உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1075 கனஅடியாக அதிகரிப்பு
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 101.16 அடியாக இருந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீப காலமாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் குறைந்த அளவே வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 462 கன அடியாக இருந்த நீர்வரத்து இந்த மழையினால் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1075 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 101.16 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.