மறைமலைநகரில் வழிப்பறி வழக்கில் 3 வாலிபர்கள் கைது
- வாலிபர்கள் 3 பேரும் மாறி மாறி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
- 3 பேரும் தனியாக வரும் நபர்களை குறிவைத்து செயின் பறிப்பது, செல்போன் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் ஆகியவை நடைபெற்று வருகிறது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் மறைமலைநகர் அருகே ஆப்பூர் சாலையில் மறைமலைநகர் போலீசார் வாகன சோதனை ஈடுபடும்போது அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர்கள் 3 பேரும் மாறி மாறி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது தாம்பரம் பகுதியை சேர்ந்த தீனா என்கிற தினேஷ் (வயது 27), ஆவடியை சேர்ந்த எழிலரசன் (வயது 19), காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த விஜய பெருமாள் (வயது 22), என்பதும் இவர்கள் 3 பேரும் தனியாக வரும் நபர்களை குறிவைத்து செயின் பறிப்பது, செல்போன் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.