உள்ளூர் செய்திகள்
வன்னியர் சங்க தலைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
- பரத் மீது சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அஜித், சூர்யா ஆகிய இருவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது
- முக்கிய குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வண்டலூர்:
மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூரை சேர்ந்தவர் காளிதாஸ் (35). பா.ம.க. பிரமுகரான இவர் வன்னியர் சங்க செங்கல்பட்டு மத்திய மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த மாதம் 12-ந் தேதி மறைமலைநகரில் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரத் என்ற கரி பரத் (27) என்பவரை மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர். பரத் மீது சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அஜித், சூர்யா ஆகிய இருவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.