மத்திய உளவுப்பிரிவு போலீஸ் என்று கூறி முன்னாள் ஊராட்சி தலைவரிடம் ரூ.7 லட்சம் பறித்தவர் கைது
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் மத்திய உளவுத்துறை போலீசாக நடித்து சம்பதிடம் ரூ.7லட்சம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசார் தாமோதரனை கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சம்பத். தி.மு.க. பிரமுகர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பத்திடம் தொலைபேசியில் பேசிய மர்மநபர் தான் மத்திய உளவுத்துறை போலீஸ் எனவும் நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்து உள்ளது.
நீங்கள் வருமானத்துக்கு கணக்கு கட்டாமல் உள்ளதால் உங்கள் மீது வழக்கு போட்டு உங்கள் கார், வீடு உள்ளிட்டவைகளை ஜப்தி செய்து விடுவோம். நடவடிக்கை எடுக்காமல் இருக்க எனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன சம்பத் ரூ. 7 லட்சத்தை தனது டிரைவரிடம் கொடுத்து அனுப்பினார். அதனை பெற்றுக்கொண்ட மர்ம நபர் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சம்பத் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் மத்திய உளவுத்துறை போலீசாக நடித்து சம்பதிடம் ரூ.7லட்சம் பறித்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.