உள்ளூர் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும்- மக்கள் நீதி மய்ய தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
- ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும்.
- தொழிற்சங்க 3-ம் ஆண்டு துவக்க விழாவிற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில், பொருளாளர் பானுமதி, துணைச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்றும் தொழிற்சங்க 3-ம் ஆண்டு துவக்க விழாவிற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் மாடசாமி, சரவணகுமார், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.