உள்ளூர் செய்திகள்

மதுராந்தகத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2023-07-05 17:01 IST   |   Update On 2023-07-05 17:01:00 IST
  • இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
  • 4 பட்டாகத்தி, 6 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுராந்தகம்:

செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு வி.வி. சாய் பிரணீத் உத்தரவிட்டதன் பேரில் மதுராந்தகம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசக்தி மேற்பார்வையில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் ஜங்ஷன் அருகே இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி (வயது 23), மதுரை மாவட்டத்தை சேரிந்த அபிஷேக்(20), மதுராந்தகத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (23), சின்னா என்ற சரண் (22) ஆகியோரை மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ். இளங்கோவன், குப்புசாமி மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்பு அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 பட்டாகத்தி, 6 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News