உள்ளூர் செய்திகள்

ஆளுநர் மாளிகை அரசியல் பேசும் இடமில்லை- கே.எஸ்.அழகிரி

Published On 2022-08-11 08:27 GMT   |   Update On 2022-08-11 08:27 GMT
  • 75-வது சுதந்திரதின பவள விழாவை காங்கிரஸ் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுகிறோம்.
  • ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் போன்ற அமைப்புகள் சுதந்திர தினத்தை கொண்டாடியதில்லை.

தருமபுரி:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அங்கு சுதந்திரதின பவள விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பாத யாத்திரையை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் நிர்வாகி நரேந்திரன் தலைமை வகித்தார்.

75-வது சுதந்திரதின பவள விழாவை காங்கிரஸ் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் போன்ற அமைப்புகள் சுதந்திர தினத்தை கொண்டாடியதில்லை. தேசிய கொடியை ஏற்றியதில்லை. தற்போது கொண்டாடுவது வரவேற்புக்குரியது. ஆனால் இவ்வளவு நாள் கொண்டாடாதது ஏன்?. ரஜினிகாந்த் கவர்னரை சந்தித்து அரசியல் பேசியதாக கூறுவது மரபு மீறிய செயல். ஆளுநர் மாளிகை அரசியல் பேசும் இடம் இல்லை.

முன்பு இருந்ததை விட உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றுவிட்டோம். ஆனாலும் எண்ணெய் வித்துகளை இன்னமும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த நிலை மாற நெல், கரும்பு போல எண்ணெய் வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News