கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்தது
- மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
- வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தக்காளி விலை பெரிதாக குறையவில்லை.
போரூர்:
தக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக தக்காளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது.
இதைத்தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு இன்று 48 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. மொத்த விற்பனை கடைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
மொத்த விற்பனையில் விலை குறைந்து உள்ள போதிலும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தக்காளி விலை பெரிதாக குறையவில்லை.ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.