உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-06-27 10:30 GMT   |   Update On 2022-06-27 10:30 GMT
  • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
  • மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்து சிறப்பாக பணிப்புரிந்த முதுநிலை ஆசிரியர்கள் ஜனகரன், தனபால், வெற்றிச்செல்வி, பிரமிளா குமாரி, குமாரி ஆகிய 5 முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News