சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்- கலெக்டர் தகவல்
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 3,552 காலிப்பணியிடங்களக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி பதிவு செய்தவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.