உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் 3 நாட்கள் களைக்கட்டிய சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழா

Published On 2022-08-15 11:10 GMT   |   Update On 2022-08-15 11:10 GMT
  • புராதன சின்னங்களை கௌரவிக்கும் வகையில் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று கூடி, தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
  • இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை சேர்ந்த 15 வயது முதல் 60 வயதுடைய 350 பேர் கலந்து கொண்ட சுதந்திர தின மாரத்தான் போட்டி பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை 6.மீ, தூரத்திற்கு நடத்தப்பட்டது.

மாமல்லபுரம்:

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை தமிழக அரசு "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக" மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி வருகிறது. மாமல்லபுரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வீடுதோறும் தேசியக்கொடி இலவசமாக கொடுக்கப்பட்டது.

புராதன சின்னங்களை கௌரவிக்கும் வகையில் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று கூடி, தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை சேர்ந்த 15 வயது முதல் 60 வயதுடைய 350 பேர் கலந்து கொண்ட சுதந்திர தின மாரத்தான் போட்டி பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை 6.மீ, தூரத்திற்கு நடத்தப்பட்டது.

மாரத்தான் போட்டியை மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம், மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், தொல்லியல்துறை, தீயணைப்பு துறை, மாமல்லபுரம் பேரூராட்சி, காவல்துறை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Tags:    

Similar News