உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க டெண்டர்

Published On 2023-08-05 05:11 GMT   |   Update On 2023-08-05 05:55 GMT
  • மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது.
  • டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலும், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படுகிறது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியான நிலையில் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

கணினி மயமாக்குவதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News