உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்திய 3 பேரையும், அவர்களை பிடித்த போலீசார்களையும் படத்தில் காணலாம்.

அரசுப்பேருந்தில் கஞ்சா கடத்திய அண்ணன், தங்கை உட்பட 3 பேர் கைது- 10 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2023-07-05 09:31 GMT   |   Update On 2023-07-05 09:31 GMT
  • கைது செய்யப்பட்ட சாரதாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  • கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி அருகே உள்ள மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயன் என்பவரது மனைவி சுமா (29), கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டா பகுதியைச் சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது மனைவி சாரதம்மா (39) மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (52) ஆகிய மூன்று பேரும் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பொதுமக்கள் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மூன்று பேரும் 10 கிலோ எடையிலான கஞ்சா பொருட்களை ஓசூர் அருகே உள்ள காளிங்கவரம், பாரதிபுரம் பகுதிக்கு வாங்கி வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் அப்பகுதிக்கு சென்று கையும் களவுமாக சுமா உள்ளிட்ட 3 பேரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News