உள்ளூர் செய்திகள்

ஏரல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை- 3 பேர் கைது

Published On 2023-07-05 10:26 IST   |   Update On 2023-07-05 10:26:00 IST
  • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அஜித்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
  • அஜித்குமார் சென்னையில் இருந்த போது அவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்தது தெரியவந்தது.

ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் அஜித்குமார் (வயது24). கூலி தொழிலாளி. நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்ற அஜித்குமார் இரவில் மோட்டார் சைக்களில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் மாராமங்கலம் பிள்ளையார் கோவில் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அஜித்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

அஜித்குமார் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அஜித்குமார் அதன்பின்னர் சென்னை செல்லாமல் சொந்த ஊரிலேயே வேலை பார்த்து வந்தார்.

அஜித்குமார் சென்னையில் இருந்த போது அவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்தது தெரியவந்தது. எனவே அந்த கொலை வழக்கு தொடர்பான முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலையில் ஈடுபட்டது அகரம் நடுத்தெருவை சேர்ந்த பாலமுருகன் (36), தூத்துக்குடி ஸ்டேட்பாங்க காலனியை சேர்ந்த மாரிச்செல்வம் (19), கோவங்காடு வடக்கு தெருவை சேர்ந்த ஐயன்ராஜ் (21) என்பது தெரியவநதது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் சென்னையில் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News