உள்ளூர் செய்திகள்

24 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி- பீடியை அணைக்காமல் வீசிய முதியவர் கைது

Published On 2023-01-31 12:40 IST   |   Update On 2023-01-31 12:40:00 IST
  • ஆட்டு குட்டிகளை கொட்டகையில் விட்டு,விட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.
  • போலீசார் வழக்குப்பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலங்குளத்தில் உள்ள கல்குவாரி அருகே சேதுராஜா என்பவர் ஆட்டு கொட்டகை வைத்துள்ளார். சம்பவத்தன்று ஆட்டு குட்டிகளை கொட்டகையில் விட்டு,விட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.

சிறிது நேரம் கழித்து ஆட்டு கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டு ஆடுகள் இறந்து கிடப்பதாக சேதுராஜாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் திரும்பி வந்து பார்த்தபோது 24 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி இறந்து கிடந்தன. மேலும் 18 ஆடுகள் தீக்காயத்துடன் அலறியபடி இருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அதில் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது70) என்பவர் பீடி குடித்து விட்டு அணைக்காமல் சோளக்காட்டில் தூக்கி எரிந்ததும், இதனால் அங்கு தீப்பிடித்து ஆட்டு கொட்டகைக்கும் பரவியதும், தீயில் கருகி ஆடுகள் இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சேதுராஜா ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News