உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

Published On 2023-05-02 12:36 IST   |   Update On 2023-05-02 12:36:00 IST
  • சிறிய முட்டை பெரிய முட்டை நடுத்தர முட்டை என 3 பிரிவாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நேற்று நடந்த கூட்டத்தில் 405 காசுகளாக இருந்த முட்டை விலையை 410 காசாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணப்பு குழு வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவித்தது.

சில நேரங்களில் நெஸ்பேக் மற்றும் முட்டை வியாபாரிகள் சங்கத்தினரும் நெக் விலையில் இருந்து மைனஸ் செய்து பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யும் விலையை அறிவித்தனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.

அவற்றை மாற்றி அமைக்க கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் ஆலோசனை கூட்டடம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் முட்டைக்கு மைனஸ் விலை இல்லாமல் நெக் அறிவிக்கும் விலைக்கு மட்டும் தமிழகம் முழுவதும் பண்ணையாளர்களும், வியாபாரிகளும் கடைபிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று முதல் நெக் அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டையை பண்ணைகளில் விற்பனை செய்யப்படும். மேலும் சிறிய முட்டை பெரிய முட்டை நடுத்தர முட்டை என 3 பிரிவாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று நடந்த கூட்டத்தில் 405 காசுகளாக இருந்த முட்டை விலையை 410 காசாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த விலை இன்று தமிழகம் மற்றும் கேரளாவில் அமுலுக்கு வந்துள்ளது.

Tags:    

Similar News