உள்ளூர் செய்திகள்

600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி

Published On 2023-05-08 06:53 GMT   |   Update On 2023-05-08 06:53 GMT
  • தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 மாணவிகளும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 மாணவர்களும் தேர்வை எழுதி இருந்தார்கள்.

இத்தேர்வு முடிவுகளை இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

Tags:    

Similar News