கடம்பத்தூர் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
- பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் கணினி அறையை அவர் பார்வையிட்டார்.
- கம்ப்யூட்டர் ஆய்வறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கல்வி குறித்து கேட்டறிந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் திடீரென்று ஆய்வு செய்தார்.
பள்ளிக்கு வந்த மாவட்ட கலெக்டரை அரசு பள்ளி தலைமையாசிரியர் ரேவதி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூபாலன் உட்பட ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பின்னர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பள்ளியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிப்பறையை ஆய்வு செய்தார். பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் கணினி அறையை அவர் பார்வையிட்டார். அப்போது கம்ப்யூட்டர் ஆய்வறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கல்வி குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன், கடம்பத்துார் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹெலன்சுமதி உட்பட ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.