உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு

Published On 2022-07-23 15:59 IST   |   Update On 2022-07-23 15:59:00 IST
  • 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
  • செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவள்ளூர்:

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ-மாணவிகளை கொண்டு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செஸ் போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News