உள்ளூர் செய்திகள்

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

Published On 2023-07-05 17:07 IST   |   Update On 2023-07-05 17:07:00 IST
  • பழக்கடைகளின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • கடையின் பூட்டை உடைத்து ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே ஏராளமான பழக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பழக்கடைகளை பூட்டிக்கொண்டு வழக்கம் போல் கடைக்காரர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

மறுநாள் கடையை திறப்பதற்காக வந்தபோது அடுத்தடுத்து இருந்த பழக்கடைகளின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியில் பணம் இல்லாததால் கடையில் இருந்த ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழக்கடைக்காரர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சியின் அடிப்படையில் கடையின் பூட்டை உடைத்து ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News