உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ஜாதகம் பார்க்க சென்ற தருமபுரியை சேர்ந்த 3 பேர் தப்பினர்

Published On 2022-12-04 10:08 IST   |   Update On 2022-12-04 10:08:00 IST
  • தட்ரஅள்ளி மாரியம்மன் கோவில் அருகே வந்த போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.
  • நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தூர்:

தருமபுரி கோட்டை தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவர் நேற்று தனது காரில் 3 பேருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்கு ஜாதகம் பார்ப்பதற்காக சென்றனர்.

பின்னர் மீண்டும் மாலை போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரிக்கு அகரம் வழியாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தட்ரஅள்ளி மாரியம்மன் கோவில் அருகே வந்த போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.

இதனை பார்த்த தமிழரசன் உடனடியாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்குள் கார் வேகமாக தீப்பிடித்துக்கொண்டது.

இது குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பற்றி எரிந்துக்கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News