உள்ளூர் செய்திகள்
திருமுல்லைவாயிலில் அடகு நகை கடையை உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
- திருமுல்லைவாயல் சிவசக்தி நகரில் கன்சிராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார்.
- திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயல் சிவசக்தி நகரில் கன்சிராம் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது அடகு கடையில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், வெள்ளி கொலுசு, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 5 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.