உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் சொத்தை திரும்ப கேட்டு 2-வது மனைவிக்கு மிரட்டல்: பா.ஜனதா நிர்வாகி கைது

Published On 2023-03-31 12:17 IST   |   Update On 2023-03-31 12:17:00 IST
  • பொய் சொல்லான் மனைவியுடன் சேர்ந்து இருந்தபோது ஏராளமான சொத்துக்கள் கிரேசி பெயரில் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கிரேசியிடம் இருந்து பொய் சொல்லான் பிரிந்து உள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மட்டக்கடை பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் பொய் சொல்லான் (வயது 58). பாரதிய ஜனதா நிர்வாகியான இவர் தனது 2-வது மனைவி கிரேசி (42) என்பவருடன் கடந்த 17 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

பொய் சொல்லான் மனைவியுடன் சேர்ந்து இருந்தபோது ஏராளமான சொத்துக்கள் கிரேசி பெயரில் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கிரேசியிடம் இருந்து பிரிந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் பொய் சொல்லான் அவரது முதல் மனைவியின் தூண்டுதலின் பெயரில் தன்னிடம் உள்ள சொத்துக்களை திருப்பித் தரும்படி கேட்டு, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், நேற்று 3 மர்மநபர்களுடன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்கும் படி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கிரேசி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு பொய் சொல்லானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News